சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேணடாம் என்றும், கொரோனாவால் எல்லோரும் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை என்றும் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்,
தமிழகத்தில் ஓமனில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸ் பிரச்சனையில் அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.